இப்பொழுதே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால் மேலும் உங்களோடு பேசுவதற்கு யாராவது தேவைப்பட்டால்:

நமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் திறனோடு நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சம் பேர் இந்த முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை செய்வது சட்டவிரோதமான அல்லது தடை செய்யப்பட்ட சமூகங்களில் கூட மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலை செய்ய நினைக்கும் பலர் வேறு வழியேதும் இருப்பதாக தெரியவில்லை எனக் கருதுகின்றனர். அந்தக் கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் அவர்களது தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவை உண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும் உடனடியானவை.

ஆனால் இவையும் கூட உண்மை:

  • தற்காலிக பிரச்சினைக்கான நிரந்தர முடிவாக பெரும்பாலும் தற்கொலை அமைகிறது
  • நாம் மனஅழுத்தத்திலிருக்கும் போது விஷயங்களை அந்தக் கணத்தின் குறுகிய மனப்பான்மையோடே நாம் பார்க்கிறோம். ஒரு வாரம் அல்லது ஒருமாதத்திற்கு பிறகு, விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றும்
  • தற்கொலை செய்து கொள்வது ஒரு சமயத்தில் நினைத்த பலர் இப்போது தாங்கள் உயிரோடு இருப்பதற்காக மகிழ்கின்றனர் - தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை வேதனையை தீர்க்கவே விரும்பினோம் - என்று அவர்கள் கூறினர்.

யாராவது ஒருவரிடம் பேசுவது என்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும். தற்கொலை உணர்வுள்ளவர்கள் தனியாகவே சமாளிக்க முயற்சிக்கக் கூடாது. அவர்கள் இப்போதே உதவியை நாடவேண்டும்..

  • குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு பேசுங்கள். ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் அல்லது சக பணியாளர்களிடம் பேசுவது மனதிற்கு மிகப்பெறும் ஆறுதலாக இருக்கும்.
  • ஒரு பீஃப்ரெண்டருடன் பேசுங்கள். ஒரு சிலர் குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ பேச முடியாது. வேறு நபர் ஒருவரிடம் பேசுவதை சிலர் மிக எளிதாக உணரலாம். கேட்பதற்கு பயிற்சியளிக்கப்பட்ட தன்னார்வலர்களுடன் உலகம் முழுவதும் உள்ளன. அழைத்தல் மிகவும் கடினமென்றால் அவர் ம் அனுப்பலாம்-.
  • மருத்துவரிடம் பேசுங்கள். நீண்ட காலமாக தற்கொலை உணர்வாலோ அல்லது மன உணர்வுக் குறைவாலோ ஒருவர் பீடிக்கப்பட்டிருந்தால் அவர் மருத்துவ ரீதியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது இராசயனப் பொருட்களின் சமச்சீரின்மையால் ஏற்படும் மருத்துவ நிலையாகும். மேலும் மருத்துவர் உதவியுடன் மருந்துகள் மூலமாகவோ அல்லது/மற்றும் பரிந்துரை வைத்தியத்தின் மூலமாகவோ இதற்கு சிகிச்சையளிக்க முடியும்.

‘மேற் செல்லலில்',நேரம் மிக முக்கியமான காரணியாகும். ஆனால் இந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பது முக்கியம். தற்கொலை உணர்வோடு யாராவது இருக்கும் போது, அவர்கள் உடனடியாக அவர்களது உணர்வுகளைப்பற்றி பேச வேண்டும்.

தற்கொலை உணர்வோடு நீங்கள் இப்போது இருந்தால், நீங்கள் பேசுவதற்கு யாராவது தேவைப்பட்டால்: