பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், நீடித்தும் அமைந்து விடுகிறது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில் ‘விலகாது’, அந்த நபரிடம் ‘தைரியமாயிருங்கள்’, ‘கவலைப்படாதீர்கள்’என்று கூறுவதெல்லாம் உதவாது. அது அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால் வழியிருக்கிறது. மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர் மருந்துகளையோ, சிகிச்சையோ அல்லது இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.
உதவியை நாடுவது மிக முக்கியமானதாகும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
- அழுத்தமான மனநிலை – பெரும்பாலான நாள், தினமும்
- மனநிலை மாற்றங்கள் – ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால், அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்
- பலவீனம் மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழத்தல்
- கோபம் மற்றும் அமைதியின்மை
- உறக்கத்தில் மாற்றங்கள் – அதிகமமாக உறங்குதல் அல்லது குறைவாக உறங்குதல்
- குறிப்பிடத்தகுந்த எடை அதிகரிப்பு அல்லது எடையிழப்பு
- மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள்
- கவனித்தலில் மற்ரும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்
- பாலுறவில் ஈடுபாடு குறைதல்
- மரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள்
நீங்கள் அறிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்:
ஒரு மருத்துவரையோ அல்லது உடல் நல நிபுணரையோ சந்திக்க அவரை ஊக்கப்படுத்துங்கள்
அவர்களுக்கு இருங்கள், எங்களுடைய பக்கங்களை படியுங்கள்.