அமைதியாகக் கேளுங்கள்!
யாராவது ஒருவர் மனஅழுத்தமடைந்திருந்தாலோ அல்லது தற்கொலை உணர்வுடன் இருந்தாலோ, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சித்தலே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.
அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்பது இன்றும் சிறந்த செயல். தற்கொலை உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ வேண்டுவதில்லை. அவர்களது பயங்களையும், ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடமே அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கேட்டர் – உண்மையாகக் கேட்டல் – எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் – கருத்துக்கூறல், அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுதல் – என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கோணத்தில் இருந்து விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது கோணத்திலிருந்து அல்ல.
தற்கொலை உணர்வுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவுகிறீர்கள் எனில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
தற்கொலை உணர்வுள்ள ஒரு நபர் என்ன விரும்புகிறார்?
- கேட்கக்கூடிய ஒருவர். அவர்கள் கூறுவதை நேரம் ஒதுக்கி தூய மனதுடன் கேட்கும் ஒருவர். யூகிக்காமல் அல்லது அறிவுரைகளோ அல்லது கருத்துக்களோ கூறாமல் அவ்ரகள் கூறுவதை முழுக்கவனத்துடன் கேட்பவர்.
- நம்பிக்கைக்குரிய ஒருவர். அவர்களை மதிக்கவும் பொறுப்புகள் ஏற்கவும் முயலாத ஒருவர். அனைத்தையும் முழுமையாக இரகசியமாக வைத்திருக்கக்கூடும்.
- அக்கறை காட்டும் ஒருவர். அந்த நபரை தேற்றி அமைதியாகப் பேசச் செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். ஏற்கும், நம்பும் மற்றும் மன உறுதியளிக்கும் ஒருவர் “நான் அக்கறைப்படுகிறேன்.” என்று கூறும் ஒருவர்.
தற்கொலை உணர்வுள்ளவர்கள் என்ன விரும்புவதில்லை?
- தனித்திருத்தல். புறக்கணிப்பு பிரச்சினையைப் பத்து மடங்கு மோசமானதாகக் காட்டும். கேளுங்கள்.
- அறிவுரை கூறப்படுதல். விளக்கங்கள் உதவாது “எல்லாம் சரியாகிவிடும்”போன்ற சுலபமான வாக்குறுதிகள் அல்லது “தைரியமாயிருங்கள்” போன்ற கருத்துக்களும் உதவாது. புகுத்தாய்தல், ஒப்பிடுதல், வகைப்படுத்தல் அல்லது விமர்சித்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள். கேளுங்கள்.
- குறுக்கு விசாரணை செய்தல். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றவோ அல்லது ஊக்கமளிக்கவோ வேண்டாம். உணர்வுகளைப் பற்றிப் பேசுதல் கடினமானது. தற்கொலை உணர்வுள்ளவர்கள் கட்டாயப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படவோ விரும்புவதில்லை. கேளுங்கள்.
எங்களுடைய ஒருவருக்கு தற்கொலை உணர்வு தோன்றும்போது தகவல் பக்கத்தைப் படிப்பது உங்களுக்கு உதவிகரமாக இருக்கக்கூடம்.